தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்- அமைச்சர் சேகர்பாபு

Published On 2025-07-11 08:47 IST   |   Update On 2025-07-11 08:47:00 IST
  • கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது சதிச்செயல் என்று பேசிவிட்டு தற்போது மாற்றி பேசுவதா?
  • எடப்பாடி பழனிசாமி, திமுகவை மட்டுமல்ல அவரது கட்சி தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார்.

சென்னை:

கோவில் உண்டியலில் போடப்படும் பணத்திலிருந்து கல்லூரிகள் கட்டுவதற்கு எதற்காக செலவு செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, அறநிலையத்துறை நிதியில் இருந்து கல்லூரி ஆரம்பித்தால், மாணவர்களின் தேவைக்கான நிதி கிடைக்காது என்பதால் அந்த கருத்தை கூறியதாக விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,

* கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது சதிச்செயல் என்று பேசிவிட்டு தற்போது மாற்றி பேசுவதா?

* எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்.

* எடப்பாடி பழனிசாமி, திமுகவை மட்டுமல்ல அவரது கட்சி தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார்.

* கொள்ளிக்கட்டையை எடுத்து தலைமை சொறியும் வேலையில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார் என்றார். 

Tags:    

Similar News