தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.வின் மாயாஜால வித்தைகள் எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது- அமைச்சர் ரகுபதி

Published On 2025-12-03 13:43 IST   |   Update On 2025-12-03 13:43:00 IST
  • ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும்.
  • பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால் நானும் கட்சியில் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள என்னை 'பி' டீம் என்று கூறியுள்ளார்.

நாங்கள் எது பி டீம், எது 'சி' டீம், எது சிலீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்து விட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றமும் கிடையாது.

ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியதற்கெல்லாம் பதில் இல்லை.

நான் தி.மு.க.விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர், மாவட்டச் செயலாளர்தான். ஆனால் நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால் எடப்பாடி பழனிசாமியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்றார்.

Tags:    

Similar News