தமிழ்நாடு செய்திகள்

வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது- அமைச்சர் துரைமுருகன்

Published On 2025-10-31 10:21 IST   |   Update On 2025-10-31 10:39:00 IST
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது.
  • வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது.

வேலூர்:

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 3-ந்தேதி வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், கட்சியினர் சார்பிலும் செய்யப்பட்டு வருகிறது.

அவர் 4-ந் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக அங்கு விழா மேடை அமைப்பது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்கு செல்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள ஆறுகளை புனரமைக்க பூகோலப்படி, சாத்தியமா என ஆய்வு செய்கிறோம். அவ்வாறு ஆய்வுக்கு பின்னர் நிதி வசதி இருந்தால் செய்யலாம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது. இது ஆபத்து தான்.

ஒரே இடத்தில் 700 இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றால், அவர்களை வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் நீக்கிவிட்டு அவர்களின் பெயரை சேர்த்து விடுவார்கள்.

வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது. அதுதான் பிரச்சனையே. ஆண்டாண்டு காலமாக இங்கிருந்து வாக்களிப்பவர்களை இல்லையென்று ஆக்கிவிடுவார்கள்.

எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News