தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published On 2025-05-02 10:49 IST   |   Update On 2025-05-02 10:49:00 IST
  • தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
  • மாணவர்கள் தோல்வியடையும் போது மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் இடைநிற்றல் அதிகரிக்கும்.

திருச்சி:

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3,5,8-ம் வகுப்பில் இனி 30 சதவீதம் குறைவாக மதிப்பெண் எடுத்தால் பெயில் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாற்றுகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ-யில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற விதி ரத்து செய்யப்பட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

தி.மு.க. அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. தேசிய கல்வி கொள்கையை தமிழகம் இதன் காரணமாகவே எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும். தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தோல்வியடைந்தால் மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் மன அழுத்தம் உருவாகும். மாணவர்கள் தோல்வியடையும் போது மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றார். 

Tags:    

Similar News