தமிழ்நாடு செய்திகள்

குழந்தைகளுக்கான எழுத்துப்பணி உயிர்ப்போடு தொடரட்டும்- எழுத்தாளருக்கு அன்பில் மகேஷ் வாழ்த்து

Published On 2025-06-18 19:05 IST   |   Update On 2025-06-18 19:05:00 IST
  • எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு “சாகித்ய பால புரஸ்கார் 2025” விருது அறிவிப்பு.
  • மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் சரவணன்.

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விழும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு "சாகித்ய பால புரஸ்கார் 2025" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

"ஒற்றைச் சிறகு ஓவியா" என்ற சிறார் நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இவ்விருது பெறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் நமது பள்ளிக் கல்வித்துறையால் மாணவர்களுக்காக வெளியிடப்படும் தேன்சிட்டு, ஊஞ்சல் ஆகிய மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் திரு.விஷ்ணுபுரம் சரவணன்.

அறிவியல் - முற்போக்கு சிந்தனைகளை குழந்தைகளிடம் விதைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குழந்தைகளுக்கான அவரது எழுத்துப்பணி உயிர்ப்போடு தொடரட்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News