தமிழ்நாடு செய்திகள்
ரெயிலில் பயணிகள் முன்பு மது அருந்திய வடமாநிலத்தவர் - வெளியான அதிர்ச்சி வீடியோ
- மது அருந்தியதை பயணிகள் எச்சரித்தும், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை.
- மது அருந்தியதை எதிர்த்துப் பேசிய மூத்த பயணியையும் அவர் மதிக்கவில்லை.
நாகர்கோவிலில் இருந்து மதுரை சென்ற ரெயிலில் , பயணிகள் முன்னிலையில் ஒரு வடமாநிலத்தவர் வெளிப்படையாக மது அருந்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மது அருந்தியதை பயணிகள் எச்சரித்தும், அவர் அதைக் கண்டுகொள்ளாமல் தனது செயலைத் தொடர்ந்துள்ளார். இதை எதிர்த்துப் பேசிய மூத்த பயணியையும் அவர் மதிக்கவில்லை.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெயில்களில் இதுபோன்று அநாகரீகமான சம்பவங்களைத் தடுக்க, ரெயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.