நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. லைவ் அப்டேட்ஸ்..
சென்னை பூண்டி ஏரி நிரம்பி வருவதால் ஏரியை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.
கனமழை காரணமாக சென்னை வரும் 15 விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் புறப்பாடும் தாமதமாகி உள்ளது.
மேகங்கள் சென்னையை நோக்கி வருவதால் விட்டுவிட்டு மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்டுவதாகவும் மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.