தமிழ்நாடு செய்திகள்

காவியா- கல்வியா?: கோவையில் பதில் சொல்லியிருக்கிறது தி.மு.க. மாணவர் அணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-07-14 21:11 IST   |   Update On 2025-07-14 21:11:00 IST
  • கல்விக்கு எதிராக யார் பேசினாலும் தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.
  • அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

காவியா - கல்வியா?

படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது திமுக மாணவர் அணி!

அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்த கால அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை.

ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் ஓரணியில் தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும், எங்கள் Dravidian Stock கூட்டம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News