கரூர் கூட்ட நெரிசல்: 1½ வயது குழந்தையை பறிகொடுத்த மாற்றுத்திறனாளி தாய் - கண்கலங்க வைக்கும் காட்சி
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்
- இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலில் தனது 1½ வயது மகனைப் பறிகொடுத்த காது கேளாத, வாய் பேச முடியாத தாயார் இடிந்துபோய் நிற்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரம் வடிவேல் தெரு பகுதியில் விமல் மற்றும் மாதேஸ்வரி தம்பதியின் 1½ வயது குழந்தை துருவ் விஷ்ணு கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த குழந்தையை அவரது அத்தை விஜய் பிரசாத்திற்கு அழைத்து சென்றார். அடுத்த மாதம் பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில், குழந்தை உயிரிழந்தது.
சிறுவனின் அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.