தமிழ்நாடு செய்திகள்

கரூர் பெருந்துயரம்: பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்

Published On 2025-09-29 13:45 IST   |   Update On 2025-09-29 13:45:00 IST
  • கரூர் பெருந்துயரம் இன்னும் என்னை வாட்டுகிறது.
  • எந்த அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர் உயிரிழக்க வேண்டும் என நினைக்க மாட்டார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

* கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.

* கரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து உடனடியாக வழங்கி உள்ளோம்.

* அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

* பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.

* அரசியல் நிலைப்பாடுகளை விலக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும்.

* கரூர் பெருந்துயரம் இன்னும் என்னை வாட்டுகிறது.

* உயிரிழந்தோர் எந்த கட்சியை சார்ந்தவராயினும் என்னை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் உறவுகள்.

* சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கும் நிலையில் பொறுப்பற்ற முறையில் விஷமமான செய்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும்.

* எந்த அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர் உயிரிழக்க வேண்டும் என நினைக்க மாட்டார்.

* பெரிய கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Tags:    

Similar News