தமிழ்நாடு செய்திகள்
கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரம் - நடிகர் கார்த்தி இரங்கல்!
- உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
- காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம்" என்று தெரிவித்தார்.