தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி... வெற்றி தி.மு.க. கூட்டணிக்கு தான் - கனிமொழி

Published On 2025-07-05 09:05 IST   |   Update On 2025-07-05 09:28:00 IST
  • நிறைய பேர் தனித்து போட்டியிடலாம். இது அவர்களது தனிப்பட்ட முடிவு.
  • விஜயின் அறிவிப்பால் சில பேர் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம்.

நெல்லையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

த.வெ.க. தனித்து போட்டியிடுவது தி.மு.க.வுக்கு சவாலாக இருக்காது. த.வெ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி. அவங்க இரண்டு பேருக்கு இடையே வேண்டுமானால் சவாலாக இருக்கும்.

நிறைய பேர் தனித்து போட்டியிடலாம். இது அவர்களது தனிப்பட்ட முடிவு. All the best. வெற்றி என்பது நிச்சயமாக தி.மு.க. கூட்டணிக்கு தான். மக்களின் வரவேற்பை பார்க்கும்போது மிகத் தெளிவாக தெரிகிறது.

முதலிலே இருந்தே தமிழ்நாடு ஓரணியில்தான் இருக்கிறது. வேறு யாரை இணைப்பது என்பது முதலமைச்சரின் முடிவு. எங்களோடு, நம்முடைய முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு வரக்கூடிய யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.

விஜயின் அறிவிப்பால் சில பேர் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம். மக்களின் எதிரிகள் யார் என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News