புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் தி.மு.க.வை தான் விமர்சிப்பார்கள்- கனிமொழி
- அரசியல் நிலையின் போக்கை மாற்றி அமைத்த ஒரு பேராளுமையாக இருக்க கூடியவர் தான் அண்ணா.
- கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி:
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க.துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், தி.மு.க. வை, த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து தாக்கி பேசி வருவதாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
புதிதாக யார்அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பது தெளிவான ஒன்று. அதனால் தான் அவர்கள் எப்போதும் எங்களை விமர்சிப்பார்கள்
தமிழகத்தின் மிகப்பெரிய ஒரு ஆளுமையாக, தமிழகத்தின் சிந்தனை போக்கை அரசியல் நிலையின் போக்கை மாற்றி அமைத்த ஒரு பேராளுமையாக இருக்க கூடியவர் தான் அண்ணா. அவரது கருத்துக்களின் வழி நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி தி.மு.க. ஆட்சியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.