தமிழ்நாடு செய்திகள்

நம்மை தாலாட்டிக் கொண்டிருக்கிற இசைத்தாய்தான் இசைஞானி இளையராஜா: உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

Published On 2025-09-13 21:43 IST   |   Update On 2025-09-13 21:43:00 IST
  • இளையராஜாவின் பாடல் இல்லாமல் இளமையில் துள்ளல் இல்ல.
  • நம் அத்தனை பேருக்கும் காதல் இல்ல.

இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபறெ்றது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

நாம் எல்லோரும் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும், நம்மை தாலாட்டிக் கொண்டிருக்கிற இசைத்தாய் தான் இசைஞானி இளையராஜா. அவருடைய பாடல் இல்லாம எந்தக் குழந்தைக்கும் தாலாட்டு இல்ல, இளமையில் துள்ளல் இல்ல, யாருக்கும் காதல் இல்ல.

வயல்வெளி, டீக்கடை, திருமணம், ஆட்டோ, பேருந்து இப்படி எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் ஒரு இசைஞானி நமது இளையராஜா. இசையமைப்பாளர் என்பதை தாண்டி அவர் ஒரு இசை மருத்துவராகவும் இருக்கிறார். இசையமைப்பாளர் என்பதைகாட்டில் இசை மருத்துவராக பெஸ்ட் ஸ்ட்ரெஸ் ரிலீஃபர்,

சிறுவயதில் நானும் கோடிக்கணக்கான மக்களை போன்று இசைஞானியின் இசையோடுதான் சேர்ந்து வளர்ந்தேன். எந்தவொரு நேரத்திலும் என்னுடைய பிளேலிஸ்டில் இசைஞானி பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். இசைஞானி இளையரஜா என டைட்டில் கார்டு மூலம் பல வெற்றி படங்களை தந்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. சுறுசுறுப்பாக, ஒழுக்கமாக, கிரியேட்டாக இருக்க வேண்டும் என்பதற்கு அனைவருக்குமான எடுத்துக்காட்டாக இருப்பவர் இளையராஜா.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News