தமிழ்நாடு செய்திகள்

"விஜய் அண்ணாவ தொட்டா தமிழ்நாடே பிளாஸ்ட்.." மிரட்டல் வீடியோ வெளியிட்ட சிறுவன் - வைரலான பின் மன்னிப்பு

Published On 2025-09-30 00:41 IST   |   Update On 2025-09-30 00:41:00 IST
  • தமிழக காவல்துறைக்கு மிரட்டல் விடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ வைரலானது.
  • "போலீஸ் ஸ்டேஷனே இருக்காது. எல்லா ரசிகர்களும் அலற உற்றுவோம்"

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக பொய் செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பும் தெரிவித்திருந்தது.

விஜயை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவர் மீது குற்றம் இல்லை என ஒரு சாரார் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக இளம் விஜய் ரசிகர்கள் அவரை ஆதரிப்பதில் தங்கள் தீவிரத்தை காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தீவிர விஜய் ரசிகரான சிறுவன் ஒருவர் விஜய்யுக்கு ஆதரவு என்ற பெயரில் தமிழக காவல்துறைக்கு மிரட்டல் விடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ வைரலானது.

அந்த வீடியோவில் பேசும் சிறுவன், "விஜய் அண்ணாவ தொட்டு பாருங்க, தமிழ்நாடே பாதிக்கும். போலீஸ் ஸ்டேஷனே பிளாஸ்ட் ஆகிடும். விஜய் அண்ணா வீட்டுக்குள்ள இறங்கி பாருங்க. தமிழ்நாடே பிளாஸ்ட், ஒண்ணுமே பண்ண முடியாது. தொட்டு மட்டும் பாருங்க. போலீஸ் ஸ்டேஷனே இருக்காது. எல்லா ரசிகர்களும் அலற உற்றுவோம், ஒண்ணுமே பண்ண முடியாது. பஸ்ஸு கிஸ்ஸுலாம் எரியும், ஒண்ணுமே பண்ண முடியாது ஓகேவா!" என்று மிரட்டல் விடுத்தான்.

இந்நிலையில் தான் பேசிய விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த சிறுவன் அதற்கு மன்னிப்பு கேட்டு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளான். அந்த பதிவில், "Sorry இனிமேல் என் IDயில் வீடியோ வராது. இனிமேல் நான் வீடியோ பதிவிட மாட்டேன். தவறாக வீடியோ போட்டத்திற்கு மன்னித்துவிடுங்கள். இனிமேல் நான் வீடியோ போடமாட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளான்.

Tags:    

Similar News