தமிழ்நாடு செய்திகள்

வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டதோ?: டெல்லி செல்லும் மு.க. ஸ்டாலினை விமர்சித்த இ.பி.எஸ்.

Published On 2025-05-20 17:00 IST   |   Update On 2025-05-20 17:00:00 IST
  • தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
  • வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?, படுத்தே விட்டாரய்யா... எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு!

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவியில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க. ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!

அன்று

2G-க்காக அப்பா டெல்லி சென்றார்...

இன்று...

டாஸ்மாக்... தியாகி... தம்பி...

வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?

படுத்தே விட்டாரய்யா...

எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு!

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்த எக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News