தமிழ்நாடு செய்திகள்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம்- லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் பெருமிதம்
- லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
- பெரியார் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை இந்தியாவில் ஒளிபரப்பு.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப்படம் திறப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
அந்த பதிவில், " உலகெங்கிலும் உள்ள மக்களின் தன்மானத்தை சுயமரியாதையையும் காத்தவர் தந்தை பெரியார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை இந்தியாவில் ஒளிபரப்பப்படுகிறது" என்றார்.