GOLD PRICE TODAY: மீண்டும் உயர்ந்தது..! புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.10 உயர்வு.
தங்கம் விலை கடந்த 16-ந்தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது. தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த 21-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தொடர்ந்து எகிறி வந்த நிலையில், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,720 சரிந்து, சற்று ஆறுதலை கொடுத்து, நேற்று மீண்டும் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.
இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று காலையில் அதிகரித்த தங்கம் விலையை தொடர்ந்து, மாலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத்தங்கம் சவரனுக்கு இன்று காலை ரூ.560 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ.1040 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, வெள்ளியின் விலை ஒரே நாளில் ரூ.20 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.365க்கும், ஒரு கிலோ ரூ.3.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.