தமிழ்நாடு செய்திகள்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
- 2012 இல் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கார்த்திக் தொண்டைமான் வென்றார்.
- 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
2012 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கார்த்திக் தொண்டைமான் வென்றார். அதன் பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திக் தொண்டைமான், "அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகிறது. அதிமுக போகும் போக்கே சரியில்லை. தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற காரணத்திற்காக திமுகவில் இணைந்தேன்" என்று தெரிவித்தார்.