கூட்டணி ஆட்சி விவகாரம்... பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் - இ.பி.எஸ். விளக்கம்
- தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் கூறி உள்ளார்.
- தனித்து அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்தி வருகிறார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதும் கூட்டணி ஆட்சி அமையுமா? என்று தொடர்ந்து பலரும் என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு "ஆம்" என்பதே எனது பதில் ஆகும். நிச்சயம் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறி இருந்தார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கூறுகையில், பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
கூட்டணி ஆட்சி என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கும் நிலையில், தனித்து அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்தி வருகிறார்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இரு கட்சி தலைவர்களின் கருத்துகளால் குழப்பம் தொடர்கிறது.