தமிழ்நாடு செய்திகள்
null

அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

Published On 2025-01-13 11:55 IST   |   Update On 2025-01-13 11:58:00 IST
  • துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
  • மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடிபழனிசாமி நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்கள் தலைமையிலான அஜித் குமார் ரேசிங் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

என கூறியுள்ளார்.

Tags:    

Similar News