தமிழ்நாடு செய்திகள்

உயிர்காக்கும் மருத்துவ துறையை சாகடிப்பது தான் திமுகவின் சாதனை- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published On 2025-11-12 12:17 IST   |   Update On 2025-11-12 15:07:00 IST
  • மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • இளநிலை உறைவிட மருத்துவர்களை ஆட்குறைப்பு செய்யும் முடிவை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்.

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் 400 இளநிலை உறைவிட மருத்துவர்களை இடமாற்றம் செய்து பிற மருத்துவமனை களில் பணி நிரவல் முறை யில் நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.

தேவையில் பாதியளவு, அதாவது 12,000 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழலில் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை உறை விட மருத்துவர்களை ஆள் குறைப்பு செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இளநிலை உறைவிட மருத்துவர்களை ஆள் குறைப்பு செய்யும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தி.மு.க.ஆட்சிக்கு வந்த பிறகு கட்டப்பட்ட புதிய மருத்துவ மனைகளுக்குத் தேவையான மருத்துவர் பணியிடங்களை உடனடியாக உருவாக்கி அந்த பணியிடங்களில் தகுதியான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும் இதுவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேசிய மருத்துவ ஆணை யத்தின் சிறப்பு அனுமதி பெற்று புதிய மருத்துவக் கல்லூரிகளை உடனடியாக அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News