தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணத்தை விமர்சித்த திமுக எம்.பி. கனிமொழி

Published On 2025-09-13 12:35 IST   |   Update On 2025-09-13 12:35:00 IST
  • இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார்.
  • மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இங்கிருந்து சாலை மார்க்கமாக சூரசந்த்பூருக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்வதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவை பகிர்ந்து திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

அவரது பதிவில், "இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருந்த போதிலும், இந்தியப் பிரதமர் இறுதியாக மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார் என்பதை நான் கவனிக்கிறேன். இரக்கம் வெளிப்படையாகத் தோல்வியடைந்துள்ளது, ஆனால் 2027 தேர்தல் ஏற்பாடுகள் அவருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதில் வெற்றி பெற்றுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News