தமிழ்நாடு செய்திகள்

காவல்துறையை வைத்திருக்கும் முதலமைச்சர் பதவி விலகணும் - ஆ. ராசாவின் பழைய வீடியோ வைரல்

Published On 2025-07-05 10:22 IST   |   Update On 2025-07-05 10:22:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
  • தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரிக்க அழைத்து சென்ற தனிப்படை போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், தி.மு.க. அரசில் 25 கஸ்டடி மரணங்கள் நடைபெற்றுள்ளதை சுட்டிக்காட்டி காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆ.ராசா கூறுகையில், கஸ்டடி மரணம் நடந்திருக்கு, அதை தடுக்கறதுக்கு நல்ல முயற்சியை முதலமைச்சர் முடிவு எடுக்கணுமே தவிர, காவல்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவர் ஒண்ணுமே இல்லன்னு சர்வசாதாரணமாக பேசினால் என்ன அர்த்தம்?

நான் குற்றம்சாட்டுகிறேன். நீங்க முதலமைச்சராக இருப்பதற்கு எந்தவித தார்மீக அடிப்படையும் கிடையாது. அதில் எந்தவிதமான தகுதியும் கிடையாது என்று பேசியுள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சாத்தான்குளம் தந்தை -மகன் மரணம் தொடர்பாக ஆ.ராசா பேசியதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

Similar News