தமிழ்நாடு செய்திகள்

மார்ச் 8-ந்தேதி தி.மு.க. கூட்டணி பிரசார மாநாடு?

Published On 2026-02-19 08:57 IST   |   Update On 2026-02-19 08:57:00 IST
  • காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களையும் மேடையேற்ற திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
  • வருகிற 8-ந்தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சியில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ள மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் கூட்டணியில் புதிதாக சில சிறிய கட்சிகளை கொண்டு வரவும் தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக வருகிற 8-ந்தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் வருகிற 22-ந்தேதி தொடங்கும் பேச்சுவார்த்தையை 15 நாட்களுக்குள் முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Tags:    

Similar News