தமிழ்நாடு செய்திகள்

சட்டசபையில் துணை முதலமைச்சர் இருக்கை மாற்றம்

Published On 2024-12-09 11:26 IST   |   Update On 2024-12-09 11:26:00 IST
  • சட்டசபையில் இதற்கு முன்பு 10-வது இருக்கையில் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்தார்.
  • அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமர வைக்கப்பட்டார்.

தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சட்டசபையில் இதற்கு முன்பு 10-வது இருக்கையில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சரான நிலையில் 3-வது இருக்கைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர், அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமர வைக்கப்பட்டார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News