தமிழ்நாடு செய்திகள்

பண்ருட்டி அருகே விவசாயி பெட்ரோல் ஊற்றி எரிப்பு - மருமகள் கைது

Published On 2026-01-30 09:40 IST   |   Update On 2026-01-30 09:40:00 IST
  • ஆத்திரமடைந்த மருமகள் ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
  • படுகாயமடைந்த ராஜேந்திரன் கடலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவத்தில் மருமகள், அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி ராஜேந்திரனின் மகன் இறந்துவிட்ட நிலையில் அவரது மருமகள் ஜெயபிரியா வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த விவசாயி ராஜேந்திரன் மருமகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகள் ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரன் கடலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மருமகள், அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவசாயி ராஜேந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News