தமிழ்நாடு செய்திகள்
பாராளுமன்ற வளாகத்தில் SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- SIR-க்கு எதிராகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கக் கோரியும் போராட்டம் நடத்தினர்.
பாராளுமன்ற வளாகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று SIR-க்கு எதிராகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற குழு பொருளாளரும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.