தமிழ்நாடு செய்திகள்

வேதாரண்யத்தை வென்றெடுக்க வேண்டும் - தி.மு.க. நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2025-11-12 12:38 IST   |   Update On 2025-11-12 12:38:00 IST
  • 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
  • கடந்த முறை 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வேதாரண்யத்தில் தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், வேதாரண்யம் தொகுதியை இந்த முறை வென்றெடுக்க வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடந்த முறை 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் வேதாரண்யத்தில் தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று வரை மொத்தமாக 37 நாட்களில் 79 சட்டசபை தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

Tags:    

Similar News