தமிழ்நாடு செய்திகள்

முகாம்களில் மனு அளிப்பவர்களுக்கு நிச்சயமாக மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்- முதலமைச்சர் உறுதி

Published On 2025-07-15 12:40 IST   |   Update On 2025-07-15 12:58:00 IST
  • மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 5000 முகாம் நடத்தி தீர்வுகள் கண்டோம்.
  • தற்போது 46 சேவைக்கு தீர்வு காணும் 10,000 முகாம்களை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தொடங்கி வைத்துள்ளேன்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரத்தில் ஐயா எல்.இளையபெருமாள் திருவுருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* வரலாற்று சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

* காமராஜர் பிறந்தநாளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.

* ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்தவர் இளைய பெருமாள். அவரின் அரங்கத்தை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன்.

* 2021-ல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் முன்னெடுப்பு மூலம் மக்களிடம் பெற்ற மனுவுக்கு 100 நாளில் தீர்வு என உறுதி தந்தேன்.

* சொன்னதை போல் தீர்வு தந்ததால் மேலும் பலர் மனு அளிக்க தொடங்கியதால் முதல்வரின் முகவரி என தனிதுறை உருவாக்கப்பட்டது.

* மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 5000 முகாம் நடத்தி தீர்வுகள் கண்டோம்.

* தற்போது 46 சேவைக்கு தீர்வு காணும் 10,000 முகாம்களை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தொடங்கி வைத்துள்ளேன்.

* மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அரசின் சேவையை வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் இலக்கு.

* தகுதி இருந்தும் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் உங்கள் பகுதியில் நடக்கும் முகாமில் விண்ணப்பங்கள் கொடுங்கள். நிச்சயமாக மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.

Tags:    

Similar News