மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தலைசுற்றல் காரணமாக கடந்த 7 நாட்களாக மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- முதலமைச்சருக்கு வழிநெடுக திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த 7 நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு சென்றனர்.
இருப்பினும், மருத்துவமனையில் இருந்த படியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.வீடு திருபெமினார்.
மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சருக்கு வழிநெடுக திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் 3 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பணிகளைத் தொடரலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.