தமிழ்நாடு செய்திகள்

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-12-07 10:17 IST   |   Update On 2025-12-07 10:17:00 IST
  • ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக இந்த புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
  • மேம்பாலத்திற்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார்.

மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக கட்டப்பட்டுள்ள இந்த புதிய மேம்பாலம் சிவகங்கை மாவட்டத்தையும், மதுரை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார்.



முன்னதாக, மதுரை கருப்பாயூரணி பகுதியில், மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான முருகவேல் ராஜன் இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

Tags:    

Similar News