தமிழ்நாடு செய்திகள்

சுயநலத்திற்காக தீய சக்திகளிடம் விலை போன ஓபிஎஸ்..!- டி.டி.வி தினகரன்

Published On 2026-02-22 10:17 IST   |   Update On 2026-02-22 10:17:00 IST
  • எம்ஜிஆர், ஜெ.புகழுக்கு ஓபிஎஸ் களங்கம் விளைவிக்கிறார்.
  • பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் என்பது வருத்தம் அளிக்கிறது.

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் நேற்று ஓபிஎஸ் முன்னிலையில் அவரது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பேசியதை பார்த்தேன். ஓபிஎஸ் அவர்கள் 30 ஆண்டுகளாக அதிமுகவுடன் தொடர்பில் உள்ளவர்.

அவர் எந்த கட்சியிலும் சேர அவருக்கு தனிப்பட்ட முறையில் விருப்பம் இருக்கலாம். உரிமை இருக்கிறது.

சட்டமன்றத்துக்குள்ளேயே ஆதரவு எம்எல்ஏ-வை பேசவைத்து எம்ஜிஆர், ஜெ.புகழுக்கு ஓபிஎஸ் களங்கம் விளைவிக்கிறார்.

சுயநலத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால் தீய சக்திகளிடம் ஓ.பன்னீர்செல்வம் விலை போய்விட்டார்.

பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் என்பது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News