தமிழ்நாடு செய்திகள்

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-09-08 08:49 IST   |   Update On 2025-09-08 08:49:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரூ.7,020 கோடி முதலீடு ஈர்த்து 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் 7 நிறுவனங்களில் ரூ.8,496 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 2,293 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. 

Tags:    

Similar News