தமிழ்நாடு செய்திகள்

2026 தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் - த.வெ.க. தலைமையில் கூட்டணி!

Published On 2025-07-04 14:00 IST   |   Update On 2025-07-04 17:25:00 IST
  • சட்டசபை தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட முடிவுகள் எடுப்பது குறித்து கட்சி தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம்.
  • ஆகஸ்ட் மாதத்தில் 2-வது மாநில மாநாடு நடத்தப்படும்.

சென்னை:

த.வெ.க. செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். அடுத்ததாக 2026 தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது குறித்தும், கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.

த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

* சட்டசபை தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட முடிவுகள் எடுப்பது குறித்து கட்சி தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம்.

* சட்டசபை தேர்தலை சந்திக்கும் விதமாக செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் டிசம்பவர் மாதம் வரை விஜய் தீவிர சுற்றுப்பயணம்.

* ஆகஸ்ட் மாதத்தில் 2-வது மாநில மாநாடு நடத்தப்படும்.

* சட்டசபை தேர்தலில் விஜய் முதலமைச்சர் வேட்பாளர்.

* சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி உள்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Full View
Tags:    

Similar News