தமிழ்நாடு செய்திகள்

மெரினாவில் உருவாகும் குழந்தைகள் பூங்கா- பெரியவர்களுக்கு உடற்பயிற்சி கூடம்

Published On 2025-10-04 21:39 IST   |   Update On 2025-10-04 21:39:00 IST
  • 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டம்.
  • சுமார் ரூ.1 கோடி செலவில் பெரியவர்களுக்கான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படுகிறது.

சென்னை மெரினா கடற்கரைக்கு பொழுது போக்க வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கடற்கரை சீரமைக்கப்பட்டு அண்ணா சதுக்கம் அருகே 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

ரூ.64 லட்சம் செலவில் அமையும் இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான ஸ்கேட்டிங் தளம், ஊஞ்சல், சறுக்கு மேடை, மரம் சுற்றும் விளையாட்டு உள்ளிட்ட வசதிகள் அமைகிறது.

இதேபோல் சுமார் ரூ.1 கோடி செலவில் பெரியவர்களுக்கான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படுகிறது. இந்த கடற்கரை சீரமைப்பால் கடற்கரைக்கு வரும் கூட்டத்தில் ஒரு பகுதியை பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளுக்கு திருப்ப முடியும். இதன் மூலம் சட்டவிரோத கடைகள் குறையும் என்றார் மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன்.

கடற்கரை சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட அனுமதியில்லாத கடைகள் அகற்றப்பட இருப்பதாகவும் மாநகராட்சி சார்பில் பேட்மின்டன் கோர்ட்டு, உடற்பயிற்சிக்கான விளை யாட்டுகள் அமைக்க இருப்ப தாகவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News