தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு, திருப்பூர் கொலை, கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

Published On 2025-05-20 17:45 IST   |   Update On 2025-05-20 17:45:00 IST
  • ஈரோடு இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு.
  • இந்நிகழ்வின்போது, தலைமை செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, களவுச் சொத்துகளை மீட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பெருந்துறை காவல் உபகோட்ட துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இந்நிகழ்வின்போது, தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News