கோவளம் அருகே சென்னையின் 6வது நீர்த்தேக்கம் - சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம்
- ரூ.471 கோடி மதிப்பீட்டில் இந்த நீர்த்தேக்கம் உருவாகவுள்ளது.
- 4,375 ஏக்கர் பரப்பளவு மற்றும் 1.6 டி.எம்.சி. கொள்ளளவு உடன் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ளது
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னையில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும்.
கோடைக்காலத்தில் இந்த குடிநீர் ஏரிகள் வறண்டு விடுவதால் சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் கோவளம் அருகே சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் அறிவிப்பின்படி கோவளம் அருகே சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம் அளித்துள்ளது.
பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளுக்கு இடையே ரூ.471 கோடி மதிப்பீட்டில் 4,375 ஏக்கர் பரப்பளவு மற்றும் 1.6 டி.எம்.சி. கொள்ளளவு உடன் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ளது.