தமிழ்நாடு செய்திகள்

தர்பூசணியில் ரசாயனம்... சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பணியிட மாற்றம்

Published On 2025-04-05 09:37 IST   |   Update On 2025-04-05 09:58:00 IST
  • தர்பூசணி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
  • சதீஷ்குமார் பேச்சால் தர்பூசணி விற்பனை அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து இருந்தனர்.

சென்னை:

சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் போஸ் சென்னை மண்டலத்தை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்பூசணியில் ரசாயனம் சேர்க்கப்படுவதாக சதீஷ்குமார் கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், பாதிக்கப்பட்டுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

மேலும், சதீஷ்குமார் பேச்சால் தர்பூசணி விற்பனை அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து சதீஷ்குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News