தமிழ்நாடு செய்திகள்
Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கோரிக்கை
- போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
- போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல் 5பேர் Grindr செயலியை பயன்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதே சமயம் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல் 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.