தமிழ்நாடு செய்திகள்

நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் - இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

Published On 2025-10-17 11:46 IST   |   Update On 2025-10-17 11:46:00 IST
  • ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
  • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

* கொள்முதல் நிலையங்களிலிருந்து 4,000 லாரிகள், 10 ரெயில்வே வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

* ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

* நாள் ஒன்றிற்கு தலா 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

* செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தற்போதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை, உடனே அனுமதி வாங்கி தாருங்கள்.

* செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது.

* நெல் அதிகமாக விளையும் இடத்தில் 2,000 முதல் 3,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்கிறோம்.

* நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்.

* நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

* கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News