சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்காந்தி முயற்சிக்கு கிடைத்த வெற்றி - செல்வப்பெருந்தகை
- பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது
- மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.
அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருப்பது ராகுல்காந்தி அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரை தனது எக்ஸ் பதிவில், "மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தொடர் அழுத்தத்தின் விளைவாக ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவு, தலைவர் ராகுல்காந்தி அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்" என்று பதிவிட்டுள்ளார்.