தமிழ்நாடு செய்திகள்
முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் விசாரணை
- இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
- மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், முதல்வரின் வீட்டில் காவல் துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.
மேலும், காவல் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.