தமிழ்நாடு செய்திகள்

பாமக சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2025-10-18 16:02 IST   |   Update On 2025-10-18 16:02:00 IST
  • சமூக ஊடக பணி செய்பவர்களுக்கு ஒரு கூட்டம் இதே போன்ற அச்சுறுத்தலை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
  • இந்த நிகழ்விற்கு தமிழக காவல்துறை உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி சமூக ஊடக பிரிவின் பொறுப்பாளர் சந்தோஷ் குமார் அவர்களை நேற்று (17.10.2025) அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்கிற நபர் கூலிப்படைகளை வைத்து, அந்தக் கூலிப்படையில் செயல்பட்ட வரதன், பிரபு, விக்னேஷ் உள்ளிட்டோரின் துணைக் கொண்டு சந்தோஷ் அவர்களை கடத்தி சென்று தாக்கி, அவரது கைபேசியை கைப்பற்றி, அந்த கைபேசியின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார் அவர்களுக்கு தொடர்பு கொண்ட சாலவேடு பாபு என்ற நபர் சோழன் குமார் வாண்டையார் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், அவர்களை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டல் விட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலே சமூக ஊடக பணி செய்பவர்களுக்கு ஒரு கூட்டம் இதே போன்ற அச்சுறுத்தலை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த கூட்டத்திற்கு தலைவராக வந்தவாசி பகுதியை சேர்ந்த ஒருவர் செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அவர் பெயரை சொல்லி சாலவேடு பாபு மிரட்டல் விடுத்துள்ளது அவரது பேச்சின் பதிவிலிருத்து தெரிய வருகிறது. இந்த நிகழ்விற்கு தமிழக காவல்துறை உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கூலிப்படையாக செயல்பட்ட பிரபு, வரதன், விக்னேஷ் மற்றும் இவர்களுக்கு தலைவராக இருந்த சாலவேடு பாபு மீது சட்ட நடவடிக்கை எடுத்தும், இவர்களுக்கு பின்புலமாக உள்ள நபரைக் கண்டறிந்து பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடக பிரிவின் சந்தோஷ் அவர்களுக்கும், சோழன் குமார் வாண்டையார் அவர்களுக்கும் மற்றும் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்.

இதே போன்ற நிகழ்வுகள் இதன் பிறகு தமிழகத்தில் எங்கும் நடைபெறாத வண்ணம் காவல்துறையும், உளவுத்துறையும் முனைப்பு காட்டி இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது ஆரம்பத்திலேயே தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இது போன்ற குற்ற செயல்கள் இதன் பிறகு நடைபெறாத வண்ணம் கடுமாயான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

Tags:    

Similar News