தமிழ்நாடு செய்திகள்

TN Assembly Election| தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது?

Published On 2026-03-15 09:07 IST   |   Update On 2026-03-15 09:07:00 IST
  • தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன.
  • இந்தியாவில் நிலவும் எரிபொருள் வினியோக பிரச்சனைகள் காரணமாக தேர்தல் தள்ளிப்போகலாம் என பலராலும் பேசப்படுகிறது.

சென்னை:

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே 7-16 தேதியும், தமிழக சட்டசபை மே 10-ந் தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந் தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் நிறைவு பெறுகிறது. புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந் தேதி முடிவடைகிறது.

இதனால் இந்த மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தலை நடத்தி முடித்திட இந்திய தேர்தல் கமிஷன் பணியாற்றி வருகிறது.

இதனை முன்னிட்டு 5 மாநிலங்களுக்கும், தேர்தல் கமிஷனர் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு அனைத்து ஆய்வுகளும் முடிந்து விட்டன. இதைப்போல தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டன.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் மதிப்பாய்வு நடைபெற்றது. இதில் தேர்தலுக்கான தேதிகளையும், வேட்புமனு தாக்கல் போன்ற தேர்தல் நடைமுறைகளுக்கான தேதிகளையும் தேர்தல் கமிஷனர்கள் தேர்வு செய்து வைத்து விட்டனர்.

தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகளுக்காக நேற்று தேர்தல் கமிஷனில் ஆலோசனையும் நடைபெற்றது. இதற்கிடையே நேற்றே தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.

இதற்கிடையே, மேற்கு ஆசிய மோதல் மற்றும் இந்தியாவில் நிலவும் எரிபொருள் வினியோக பிரச்சனைகள் காரணமாக தேர்தல் தள்ளிப்போகலாம் என பலராலும் பேசப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் சுமிஷன் அலுவலகங்களில் விசாரித்தபோது, தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் தேதியை அறிவித்த உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

Tags:    

Similar News