தமிழ்நாடு செய்திகள்

51 வயதில் பூமர் மாதிரி பேசுகிறீர்கள் என கூறினால் விஜய் மனது வருத்தப்படாதா? அண்ணாமலை காட்டம்

Published On 2025-08-22 17:43 IST   |   Update On 2025-08-22 17:43:00 IST
  • முதலமைச்சர் குறித்து பேசும்போது கண்ணியமாக பேச வேண்டும்.
  • எல்லாருக்குமே தாய் மாமா என்றால் கடந்த 50 வருடமாக அந்த தாய் மாமா எங்கே சென்றார்.

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் விஜய் குறித்து முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சில கருத்துக்களை கூறியுள்ளார்.

விஜய் குறித்து அண்ணாமலை கூறியதாவது:-

விஜய்யும், நாங்களும் சித்தாந்தத்தில் நேர் எதிராக உள்ளோம். விஜய் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். மற்றவர்களின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தன்னுடைய பலத்தை பற்றி பேசவில்லை. விஜய் தனது ரசிகர்களின் பட்டாளத்தை வாக்குகளால் மாற்ற வேண்டும் என்றால் பலமான சித்தாந்தம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.

எல்லாருக்குமே தாய் மாமா என்றால் கடந்த 50 வருடமாக அந்த தாய் மாமா எங்கே சென்றார். எத்தனை பேருக்கு சீர் செய்தார்? எத்தனை சகோதரிகளுக்கு காசு வாங்காம டிக்கெட் கொடுத்தாரு?

முதலமைச்சர் குறித்து பேசும்போது கண்ணியமாக பேச வேண்டும். 51 வயதில் பூமர் மாதிரி பேசுகிறீர்கள் என கூறினால் விஜய் மனது வருத்தப்படாதா?

என அவர் கூறினார்.

Tags:    

Similar News