தமிழ்நாடு செய்திகள்
ராமதாஸ் பிறந்தநாளில் நடைபயணம் தொடங்க அன்புமணி திட்டம்?
- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஜூலை மாதம் 25-ந்தேதி பிறந்த தினம் ஆகும்.
- முதல் கட்டமாக வடமாவட்டங்களில் தொகுதி வாரியாக அவர் நடைபயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை :
பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையேயான மோதல் தற்போது வரை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி வாரியாக உரிமை மீட்பு நடைபயணம் செல்ல அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஜூலை மாதம் 25-ந்தேதி பிறந்த தினம் ஆகும். அன்றைய தினம் டாக்டர் அன்புமணி நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல் கட்டமாக வடமாவட்டங்களில் தொகுதி வாரியாக அவர் நடைபயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடைபயணத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அவர் சந்தித்து பேச இருப்பதாக தெரிய வந்துள்ளது.