தமிழ்நாடு செய்திகள்

மிரட்டிய இ.பி.எஸ். - அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குற்றச்சாட்டு

Published On 2025-08-19 11:52 IST   |   Update On 2025-08-19 11:52:00 IST
  • நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
  • அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் டிரைவர் அதில் நோயாளியாக ஆஸ்பத்திரிக்கு செல்வார் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு நேற்று எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். இரவு 10.30 மணி அளவில் எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது, கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதில் நோயாளிகள் யாரும் இல்லை.

ஆவேசம் அடைந்த எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசு வேண்டும் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்சை விட்டு இடையூறு செய்கின்றனர்.

மக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு? இதுதான் தி.மு.க.வின் கேவலமான செயலாகும். நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது.

நான் பேசிய கூட்டங்களில் இடையூறு செய்வதற்காக ஆம்புலன்சுகளை விட்டுள்ளனர். அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் டிரைவர் அதில் நோயாளியாக ஆஸ்பத்திரிக்கு செல்வார் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அ.தி.மு.க.வினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர் என்றார். 

Tags:    

Similar News