தமிழ்நாடு செய்திகள்

வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

Published On 2025-03-15 09:13 IST   |   Update On 2025-03-15 12:48:00 IST
2025-03-15 05:09 GMT

எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். 

2025-03-15 05:09 GMT

வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மூலம் குறைந்த வாடகையில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

2025-03-15 05:07 GMT

உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.

2025-03-15 05:07 GMT

சிறுகுறு உழவர்கள் வேளாண் கருவிகள் வாங்க 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2025-03-15 05:06 GMT

சிறுகுறு உழவர்கள் பயனடையும் வகையில் மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும்.

2025-03-15 05:06 GMT

சிறிய வகை வேளாண் கருவிகளுக்கான மானியம் ரூ.1.75 லட்சமாக உயர்வு

2025-03-15 05:05 GMT

17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.215.80 கோடி நிதி ஒதுக்கீடு.

2025-03-15 05:04 GMT

வெண்ணை பழ உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கீடு.

2025-03-15 05:03 GMT

புதிய பலா சாகுபடி உள்ளிட்ட திட்ட கூறுகளை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

2025-03-15 05:03 GMT

பலா மேம்பாட்டு இயக்கத்திற்காக ரூ.3.75 லட்சம் நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Tags:    

Similar News