அ.தி.மு.க தரப்பில் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை- அமித்ஷா
- 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டி என அறிவிப்பு.
- யார், யாருக்கு எத்தனை தொகுதி, ஆட்சியமைக்கும் முறை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.
சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித்ஷா மேலும் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் மோடி தலைமையிலும் மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேர்தலை சந்திக்க உள்ளோம்.
பாஜக, அதிமுக கூட்டணி நிச்சயம் தமிழகத்தில் ஆட்சியமைக்கும். ஜெயலலிதா காலம் முதலே, அதிமுகவுடன் இணைந்து பாஜக பயணித்து வருகிறது.
அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக உறுப்பினர் அமைச்சர் ஆவாரா என்ற கேள்விக்கு வெற்றிப்பெற்ற பிறகு பதில் சொல்கிறோம்.
அதிமுக தரப்பில் இருந்து எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணி என்பது அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் தலையிட முடியாது.
அதிமுகவின் தனிப்பட்ட கட்சி விஷயங்களில் பாஜக பங்கேற்காது, தேர்தல் விவகாரத்தில் மட்டுமே பங்கேற்போம்.
யார், யாருக்கு எத்தனை தொகுதி, ஆட்சியமைக்கும் முறை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.
அதிமுக பாஜக கூட்டணியால் இருவருக்குமே பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.